அனுமதியின்றி தேர்தல் போஸ்டர்கள்-நடவடிக்கை எடுக்க கோரிக்கை

1904பார்த்தது
அனுமதியின்றி தேர்தல் போஸ்டர்கள்-நடவடிக்கை எடுக்க கோரிக்கை
திருவள்ளூர் மாவட்டத்தில் லோக்சபா தேர்தலை முன்னிட்டு தற்போது, கட்சியினர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ஓட்டு கேட்டு வரும் வேட்பாளர் மற்றும் சின்னத்துடன் போஸ்டர்கள் ஒட்டும் பணி நடந்து வருகிறது.

இந்த போஸ்டர்களை தேர்தல் அலுவலர்களிடம் முறையான அனுதி பெற்று, ஒட்டப்படும் பகுதிகளிலும் முறையான அனுமதியுடன் தான் ஓட்ட வேண்டுமென, தேர்தல் அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

அரசு சுவர்களில் எவ்வித போஸ்டர்கள் ஒட்டுவதற்கு அனுமதியில்லை எனவும் தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர். ஆனால், திருப்பாச்சூர் - கொண்டஞ்சேரி நெடுஞ்சாலையில் பழைய திருப்பாச்சூர் பகுதியில் எவ்வித அனுமதியுமின்றி அரசு பயணியர் நிழற்குடை உட்பட பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

எனவே மாவட்ட நிர்வாகம் தேர்தல் போஸ்டர்கள் ஒட்டுவது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி