திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை உதவி இயக்குனர் கதர் கிராம தொழில்கள் அலுவலக கதர் விற்பனை நிலையத்தில் அண்ணல் காந்தியடிகள் பிறந்தநாள் விழா மற்றும் தீபாவளி கதர் சிறப்பு விற்பனை தொடக்க விழா நாளை(அக்.02) நடைபெற உள்ளது. இதில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கலந்து கொண்டு காந்தியடிகள் படத்தை திறந்து வைத்து சிறப்பு விற்பனையை துவங்கி வைக்க உள்ளார்.