விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இவைகள் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி அன்று உவரி கடலில் கரைக்கப்பட உள்ளது.
விநாயகர் சதுர்த்தி விழா அமைதியுடன் நடைபெறும் வகையில் வள்ளியூர் டிஎஸ்பி யோகேஷ் குமார் உத்தரவின்படி, நேற்று திசையன்விளை பகுதிகளில் போலீஸார் அணிவகுப்பு நடைபெற்றது. இதில் முக்கிய வீதிகளின் வழியாக போலீசார் அணிவகுப்பு நடத்தினர்.