நெல்லை மாஞ்சோலை தேயிலை தோட்டத்தின் குத்தகை காலம் முடிவடைவதால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. தொழிலாளர்களின் நலனுக்காக அரசே தேயிலைத் தோட்டத்தை எடுத்து நடத்த வேண்டும் என அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் இதுதொடர்பாக நேற்று (ஜூன் 7) நெல்லையில் அனைத்து கட்சி நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதில் தேயிலை தோட்டத்தை அரசே நடத்த வேண்டுமென கூறியுள்ளனர்.