மத்திய சென்னை பாராளுமன்ற பகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் மீண்டும் அமோக வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான மைதீன்கான் தயாநிதிமாறனை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்தினார் அப்போது பொதுக்குழு உறுப்பினர் பரமசிவன் ஐயப்பன் உள்பட நெல்லை திமுகவினர் பலர் இருந்தனர்.