நெல்லையில் இன்று தீபாவளி பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை மகிழ்ச்சியுடன் வெடித்து கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் இன்று மதியம் நெல்லை மாநகரின் கேடிசிநகர், சமாதானபுரம், மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக பட்டாசு வெடிப்பதில் பொதுமக்களுக்கு சற்று சிரமம் ஏற்பட்டுள்ளது.