திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் கணேசபுரம் வடக்கு தெருவின் நடுவில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் நேற்று மேலப்பாளையம் போலீசார் போதை பொருட்கள் விற்பனை குறித்து தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த அதிக அளவிலான போதை பொருட்களை பறிமுதல் செய்து கடைக்காரர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.