தமிழ்நாடு தேர்தல் ஆணையர் ஜோதி நிர்மலாசாமி இன்று (ஜூன் 10) நெல்லைக்கு வருகை தந்தார். தொடர்ந்து அவர் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளாட்சித் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் மற்றும் நகராட்சி மற்றும் பேரூராட்சி ஆணையாளர்கள், உள்ளாட்சித் துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.