தேனி: இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாத்திட உறுதிமொழி ஏற்ற விசிக

62பார்த்தது
தேனி: இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாத்திட  உறுதிமொழி ஏற்ற விசிக
தேனி மாவட்டம் பெரியகுளம் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு தேனி கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் திரளாக ஒன்று கூடி இந்திய அரசியலமைப்புச் சட்டம் அரங்கேற்றப்பட்ட நாளான நவம்பர் 26 ல் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாத்திட வேண்டி உறுதிமொழி ஏற்றனர். 

சட்டத்தின் அடிப்படை கூறுகளான நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை நீர்த்துப் போகாமல் பாதுகாத்திடவும், புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் கண்ட கனவை நனவாக்கும் வகையில் பிறப்பின் அடிப்படையில் ஆன உயர்வு, தாழ்வு, எதிலும் சனாதன பாகுபாடு இல்லாத ஒரு புதிய ஜனநாயக இந்தியாவை கட்டமைத்திட உறுதிமொழி ஏற்கப்பட்டது. 

அரசியலமைப்புச் சட்டம் இன்னும் அம்பேத்கர் சட்டமாகவே உள்ளது என்றும், மனுஸ்மிருதி எனும் மனு சட்டத்திற்கு நேர் எதிரானதாகும் என்றும் தெரிவித்தனர். அம்பேத்கர் சட்டத்திற்கு இன்று மதவாத சக்திகளால் பேராபத்து சூழ்ந்துள்ளது. மிகப்பெரிய கேடான சூழலில் இருந்து அரசியலமைப்பை பாதுகாக்க அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்பது புதிய சமத்துவ இந்தியாவை கட்டமைப்பதற்கு ஒரே வழியாகும் என்றும் அதற்கு இந்திய அளவில் சனாதன சக்திகளை தனிமைப்படுத்திடவும், ஜனநாயக சக்திகளை ஐக்கியப்படுத்திடவும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி