தேனி: குழந்தை பாசம்.. விஷம் குடித்த விவசாயி

61பார்த்தது
தேனி: குழந்தை பாசம்.. விஷம் குடித்த விவசாயி
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்த ரஞ்சித்குமார் (37) என்ற விவசாயி நவம்பர் 20 அன்று விஷம் குடித்து பலியானார். இவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு இவருடைய மனைவிக்கு குழந்தை பிறந்த நிலையில் குழந்தையைப் பார்க்கச் சென்றுள்ளார். மறுபடியும் சேர்ந்து வாழலாம் என மனைவியைக் கூப்பிட்டுள்ளார். ஊர் கூடிப் பெரியவர்களைச் சாட்சியாக வைத்துப் பேசி அனுப்புவதாக மாமனார் வீட்டில் கூறியதால் மனமுடைந்து ரஞ்சித்குமார் விஷம் குடித்ததாக தெரிகிறது. ஆண்டிபட்டி போலீசார் இந்தச் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி