காண்ட்ராக்ட் பணிக்கு மின்சாரம் திருட்டு - வைரலாகும் வீடியோ!

66783பார்த்தது
ராமநாதபுரம்: கடலாடி அருகே பெரியகுளம் கிராமத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் சாக்கடை கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி ஊராட்சி நிர்வாகம் சார்பில் நடைபெற்று வருகிறது. இந்த அரசு ஒப்பந்த திட்டப்பணி பயன்பாட்டிற்கு முழுமையாக கிராமத்தில் பயன்பாட்டில் உள்ள தெருவிளக்கு மின் கம்பத்தில் பட்டப் பகலில் வயர் மூலமாக நேரடியாக கொக்கியை இழுத்து ஒப்பந்த திட்டப்பணிக்கு பயன்படுத்தி மின் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். ஒப்பந்த பணிகள் நடைபெற்று வரும் காட்சியை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நிலையில் வைரலாகி வருகிறது.

மிகவும் ஆபத்தான முறையில் உயர் அழுத்த மின்சாரம் பாய்கின்ற மின் கம்பியில் எந்தவித பாதுகாப்பும் இன்றி கொக்கி போட்டு மின்சாரத்தை திருடி அரசு ஒப்பந்த பணியினை மேற்கொள்வது கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி