தங்கையை சீரழித்த 3 அண்ணன்கள்.. அதிர்ச்சி

99112பார்த்தது
தங்கையை சீரழித்த 3 அண்ணன்கள்.. அதிர்ச்சி
சென்னை புது வண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் பெண்டா. இவருக்கு 3 மகள்களும் 1 மகனும் உள்ளனர். இந்நிலையில் 13 வயதுடைய 2வது மகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது என கூறி மருத்துவமனையில் அனுமதித்தபோது சிறுமி 5 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் திடுக்கிடும் தகவலாக சிறுமியின் பெரியப்பாவின் மகன்கள் மனோஜ், அஜய் மற்றும் கண்ணா பெண்டா ஆகிய மூவரும் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து மனோஜை போக்ஸோவில் கைது செய்த போலீசார் மற்ற இருவரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி