கருக்கலைப்பு செய்த கல்லூரி மாணவி பலி

71173பார்த்தது
கருக்கலைப்பு செய்த கல்லூரி மாணவி பலி
திண்டுக்கல் ஆத்தூர் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி காந்திகிராமத்தில் உள்ள கல்லூரி விடுதியில் தங்கி பட்டய படிப்பு படித்து வந்தார். பெற்றோர் இறந்துவிட்டதால், திண்டுக்கல்லில் உள்ள தனது பாட்டியின் வீட்டில் வளர்ந்து வந்தார். விடுதியில் உள்ள மாணவியை திருச்சியில் வசிக்கும் அவருடைய அத்தை மீனாட்சி பார்க்கச் சென்றுள்ளார். அப்போது, அவரது உடலில் மாற்றங்கள் இருந்ததால் சந்தேகமடைந்து, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

அங்கு மாணவியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த அவர், மாணவியிடம் விசாரித்த போது, ராம்குமார் என்பவரை காதலிப்பதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருக்கலைப்பு செய்த நிலையில், சிகிச்சை பலனின்றி மாணவி உயரிழந்தார். இது பற்றி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து மாணவியின் சகோதரி கொடுத்த புகாரின் பேரில் காதலன் ராம்குமார், அத்தை மற்றும் சிறுமிக்கு கருகலைப்பு செய்த டாக்டர் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்புடைய செய்தி