ஆணவக்கொலைக்கு பலியான இளைஞரின் தங்கை

1042பார்த்தது
ஆணவக்கொலைக்கு பலியான இளைஞரின் தங்கை
ஈரோடு மாவட்டம், எரங்காட்டூர் குருவாயூரப்பன் நகரைச் சேர்ந்தவர் சுபாஷ் (24). சத்தியமங்கலம் அருகே உள்ள காந்தி நகரைச் சேர்ந்த சந்திரன் என்பவருடைய மகள் மஞ்சுவும் (22) காதலித்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்துகொண்டுள்ளார். சுபாஷ் பட்டியலினத்தவர் என்பதால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மஞ்சுவின் வீட்டார் அவரை கொலை செய்த திட்டமிட்டுள்ளனர். சம்பவத்தன்று சுபாஷ் தனது தங்கை ஹரிணி-யை (15) பள்ளியில் விட இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது பின்னல் வந்த வேன் இவர்கள் மீது மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இந்நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஹரிணி பரிதாபமாக உயிரிழந்தார். சுபாஷ் கால் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் உள்ளார். எஸ்.சி,எஸ்டி வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் சந்திரன், சித்ராவை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி