பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. குறிப்பாக
பங்குச்சந்தை கடந்த வாரம் மிக மோசமாக சரிந்து காணப்பட்டது. இந்நிலையில் இன்று வாரத்தின் முதல் நாள்
பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் சுமார் 301 புள்ளிகள் சரிந்து 63,481 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 88 புள்ளிகள் சரிந்து 18,958 புள்ளிகளாகவும் வர்த்தகம் நடைபெறுகிறது. இதனையடுத்து, NLC India,Bharat Petroleum மற்றும்
அதானி குழுமத்தின் முக்கிய பங்குகள் உயர்ந்து காணப்படுகின்றன.