அதிமுக தொடர்ந்த வழக்கில் சபாநாயகர் அப்பாவு வரும் 13-ம் தேதி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக எம்எல்ஏக்கள் திமுகவில் சேர தயாராக இருப்பதாக அப்பாவு பேசியதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கை சென்னை ஆட்சியர் அலுவகத்தில் உள்ள எம்எல்ஏ, எம்பிகளின் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் விசாரிக்கிறது. சம்மனை நிராகரிக்கவில்லை, நேரில் ஆஜராக தயாராக உள்ளதாக அப்பாவு தரப்பு கூறியுள்ளது.