இதையெல்லாம் செய்யாதீங்க.. முகப்பரு போக இயற்கை தீர்வு!

6998பார்த்தது
இதையெல்லாம் செய்யாதீங்க..  முகப்பரு போக  இயற்கை தீர்வு!
இன்றைய இளைஞர்களுக்கு பரு தான் முக்கிய எதிரியாக உள்ளது. அடிப்படையில் ஆரோக்கியமான தூக்கத்தை கடை பிடிப்பது நல்லது. பச்சைத் தண்ணீரில் குளித்து அதிக எண்ணெய் இல்லாத உணவை சாப்பிடுவது நல்லது. அது போல முகம் கழுவாமல் பவுடர் போட்டாலும் பரு வரும். சரி பரு வருவதற்கு என்ன தான் காரணம். வாருங்கள் பார்ப்போம்.

பரு பெரிய அளவில் வருகிறதே என்ற கவலை இன்றைய தலை முறை இளசுகளுக்கு அதிகம் உள்ளது. உண்மையில் கொழுப்புப் பொருள் அதிகமானால், வியர்வை மூலம் வெளியேறாமல் முகத்தில் தேங்கும் சமயத்தில் பருவாக அவைகள் உரு மாறுகிறது. பரு வந்து விட்டால் நகம் படாமல் பாதுக்காப்பது நல்லது.

சிலர் பருவை கோபத்தில் கில்லி விடுவதை பார்க்க முடிகிறது. அவ்வாறு செய்தால் பரு மேலும், மேலும் அதிகமாகிக் கொண்டு தான் போகும். அதனால் பரு வந்து விட்டால் அதனை முதலில் கில்லி விடுதல் கூடாது. அத்துடன் கொழுப்புப் பொருட்களை தவிர்க்க வேண்டும். உதாரணமாக தயிர், மாமிசம், சாக்லெட், ஐஸ்க்ரீம், வறுவல் பொறித்த பலகாரங்களை சாப்பிடக் கூடாது.

பருவுக்கு இன்னொரு முக்கியக் காரணம் மலச்சிக்கல் தான். இந்த மலச் சிக்கலை போக்க தினமும் சாப்பாட்டில் கீரையை சேர்த்துக் கொள்வது நல்லது. இது தவிர குறைந்தது எட்டு டம்பளர் தண்ணியாவது தினமும் குடிக்க வேண்டும். அப்படியே பருக்கள் ஒரு வேளை பெருத்து பருத்து பழுத்து விட்டால் கவலைப் படாதீர்கள் பச்சரிசி மாவுடன் சிறிது மஞ்சளை அரைத்து அதைச் சூடாகக் கிளறி, கட்டியின் மேல் வைத்து, பிறகு காலையில் மருந்து சோப்பு போட்டு சற்று சூடான நீரால் முகத்தை நன்றாகக் கழுவ வேண்டும்.

பயத்தம் பருப்பு போட்டுக் குளித்தாலே எந்தத் தோல் வியாதிகளும் வராது. அது போல ஆயுர்வேத சோப்புகள் போட்டுக் குளிப்பது பரு போன்றவை வராமல் தடுக்கும். இது தவிர நான் ஏற்கனவே கூறிய படி ஆவிக் குளியல் செய்யலாம். ஆவிக் குளியல் செய்த பிறகு குளிர்ந்த நீரால் லேசாக சோப்புப் போட்டு முகத்தைக் கழுவி விடவும். அதுபோல செயற்கையான க்ரீம், பவுடர் இவற்றுக்குப் பதிலாக, துளி பாலேடு முகத்தில் தடவிக் கொண்டு, பிறகு கழுவினால் முகம் பளபளப்பாக மெருகேறி இருக்கும்.

முகப் பருக்கள் போக இதோ சில டிப்ஸ்:

1. தேனுடன் சிறிது லவங்கப்பட்டை தூளைச் சேர்த்து முகத்தில் தடவலாம். கடுகை சிறிது தேனுடன் கலந்து முகத்தில் தடவலாம். அவ்வாறு தடவினால் முகப் பரு பிரச்சனை தீரும்.
2. மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை முகத்தை குளிர்ந்த நீரால் கழுவுங்கள். முகம் கழுவ சோப் அதிகமாக பயன்படுத்தாதீர்கள்.
3. தினமும் குளிக்கும்போது முகத்தில் சோப்புக்குப் பதில் பாசிப்பயறு மாவைத் தேய்த்துக் குளித்துவர முகம் பொலிவு பெறும். கரும் புள்ளிகள் மறையும்.
4.தக்காளி சாற்றினை முகத்தில் தடவிவர முகப்பரு நீங்கும்.
5. காய்ச்சாத பாலை முகத்தில் தடவிவர, முகப்பரு நீங்கும்.