திருவாரூர்: நீடாமங்கலம் அருகே ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஏழுமலை. இவர் அருகிலுள்ள வீட்டிற்கு சென்றபோது தண்ணீர் தாகம் எடுத்ததால் அங்கு பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்த டீசலை தண்ணீர் என நினைத்து குடித்துள்ளார். இதனால் ஏழுமலை வலியால் துடித்துள்ளார். அவரது உறவினர்கள் நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து பின்னர் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.