தமிழ்நாட்டில் முருங்கைக்காய் விலை ஒரே நாளில் கிலோவுக்கு ரூ. 100 அதிகரித்துள்ளது. நேற்று (நவ. 27) வரையில் மொத்த விலையில் கிலோ ரூ. 250-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று (நவ. 28) ரூ. 350-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனை கடைகளில் ரூ. 380 வரையில் விற்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். தொடர் மழையால் வரத்து குறைந்ததோடு, காய்களின் தரமும் குறைந்ததால் விலை எகிறியுள்ளது.