நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த சிங்களாந்தபுரத்தில் நண்பர்கள் இடையே ஏற்பட்ட சண்டையை சமாதனம் செய்யச் சென்றவர் குத்திக் கொலை செய்யப்பட்டார். ராமகிருஷ்ணன், சுந்தர்ராஜன் ஆகியோர் இடையே ஏற்பட்ட சண்டையை சமாதானம் செய்யச் சென்ற விசைத்தறி தொழிலாளி கார்த்திகேயன் என்பவர் கத்திக் குத்தில் படுகாயமடைந்து உயிரிழந்தார். இது குறித்து பேளுக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள சுந்தர்ராஜனை தேடி வருகின்றனர்.