இந்தோனேசியா: சுமத்ரா மாகாணத்தில் மராபி எரிமலை நேற்று (நவ.03) பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில், சுமார் 6 ஆயிரத்து 500 அடி உயரத்துக்கு கரும்புகை வெளியேறியது. எனவே அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்த இயற்கை பேரிடரில் 10 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர். சிதைந்த வீடுகளுக்குள் சிக்கி பலர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என கூறப்படுகிறது.