ராஜஸ்தானின் கோட்டாவில் திங்கள்கிழமை பயங்கர சாலை விபத்து நடந்தது. இரண்டு மாத கர்ப்பிணியான கோனா என்ற பெண் தனது கணவர் மற்றும் பத்து வயது மகளுடன் பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு பைக் இவர்களது பைக் மீது மோதியதில் கீழே விழுந்தனர். அப்போது, பின்னால் சென்று கொண்டிருந்த பேருந்து எதிர்பாராதவிதமாக கர்ப்பிணி மீது ஏறி இறங்கியது. இதில், பேருந்து சக்கரங்களுக்கு அடியில் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.