13 வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளான நடிகை

40104பார்த்தது
13 வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளான நடிகை
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பிரபலமான நடிகை யாஷிகா ஆனந்த், கவலை வேண்டாம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தனது பயணத்தை தொடர்ந்தார். இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் உணர்ச்சிகளை தூண்டும் இவர், தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் 13 வயதில் இருக்கும்போது நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான இனிமே இப்படிதான் படத்தின் படப்பிடிப்பில் அவருக்கு ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், அவரை எட்டி உதைத்துவிட்டு தப்பி வந்ததாக கூறியுள்ளார். பெண்கள் எப்போதும் தைரியமாக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி