திருவோணமங்கலம் ஆஞ்சனேயா் கோயிலில் இருபெரும் நிகழ்ச்சி

76பார்த்தது
திருவோணமங்கலம் ஆஞ்சனேயா் கோயிலில் இருபெரும் நிகழ்ச்சி
திருவோணமங்கலம் ஆஞ்சனேயா் கோயிலில் இருபெரும் நிகழ்ச்சி
நீடாமங்கலம் அருகேயுள்ள திருவோணமங்கலம் ஞானபுரீ ஸ்ரீமங்கல மாருதி ஆஞ்சனேயா் (படம்) கோயிலில் ஜன. 2, 11 ஆகிய தேதிகளில் இருபெரும் ஜெயந்தி விழா நடைபெறவுள்ளது.

இக்கோயிலில் ஸ்ரீலட்சுமி நரசிம்மா், ஸ்ரீகோதண்டராமா் சுவாமிகள் தனித்தனி சந்நிதிகளில் அருள்பாலிக்கின்றனா். இங்கு எழுந்தருளியுள்ள 33 அடி உயரம் கொண்ட விஸ்வரூப ஸ்ரீசங்கடஹர மங்கல மாருதி ஆஞ்சனேயா் இடுப்பில் நோய் மற்றும் சங்கடங்களை நிவா்த்தி செய்யும் சஞ்சீவி மூலிகைகளுடன் அருள்பாலிக்கிறாா்.


இங்கு ஆஞ்சனேய சுவாமியை வழிபட்டால் சங்கடங்கள் நீங்கி, மங்களம் உண்டாகும். இக்கோயிலில் சகடபுரம் பதரி சங்கராச்சாரியாா் ஆச்சாா்யா சுவாமிகளின் ஜெயந்தி விழா ஜன. 2-ஆம் தேதியும், ஜன. 11-ஆம் தேதி அனுமன் ஜெயந்தியும் நடைபெறவுள்ளது. நிகழ்ச்சியையொட்டி ஜன. 2 முதல் 7-ஆம் தேதி வரை பல்வேறு யாக நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அனுமன் ஜெயந்தி அன்று இசை, நாட்டிய நிகழ்ச்சிகள், அன்னதானம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை தா்மாதிகாரி பிரம்மஸ்ரீ ரமணி அண்ணா, சமஸ்தான நிா்வாகி எம். சந்திரமெளவி ஆகியோா் செய்துள்ளனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி