தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே அகரபேட்டையில் தாயை காணவில்லை என்று மகன் தோகூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அகரப்பேட்டை மணல்மேடு தெருவை சேர்ந்தவர் பெரியசாமி மனைவி லட்சுமி (45). இவர் கடந்த 11ஆம் தேதி காலை கந்தர்வ கோட்டையில் உள்ள தனது மூத்த மகன் சங்கர் என்பவர் வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றாராம். அங்கும் செல்லாமல் வீட்டிற்கும் இதுவரை திரும்பவில்லையாம். பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் அவரது இளைய மகன் சிலம்பரசன் தோகூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகார் அளித்தார். புகாரை ஏற்று வழக்கு பதிந்து காவல் ஆய்வாளர் ஜெகதீஸ்வரன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.