உலக இயற்கை பாதுகாப்பு தினவிழா

57பார்த்தது
உலக இயற்கை பாதுகாப்பு தினவிழா
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள திருமங்கலக்கோட்டை கீழையூர் அரசு மேல் நிலைப் பள்ளியில் உலக இயற்கை தின பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் வளர்மதி தலைமை வகித்தார். பசுமை படை ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் ஆறுமுகம் நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்தார். இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கு மற்றும் பெற்றோர்களுக்கு இயற்கை சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பள்ளியில்
பெற்றோர்களை வரவழைத்து மூன்று மரக்கன்றுகள் நடப்பட்டு அந்த மரக்கன்றுகளுக்கு பெற்றோர்களின் பெயர்களான புஷ்பா, அமலா. கீதா. ரேணுகா என பெயர் சூட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி