தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளர் லோகநாதன் தலைமையில் தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறை மண்டல இணைப்பதிவாளர்களின் ஆய்வுக் கூட்டம் தஞ்சாவூர் மத்தியக் கூட்டுறவு வங்கியின் தலைமையகத்தில் நடந்தது. தஞ்சாவூர் மண்டல இணைப்பதிவாளர் தமிழ்நங்கை, திருவாரூர் மண்டல இணைப்பதிவாளர் சித்ரா, நாகை மண்டல இணைப்பதிவாளர் சரவணன், மயிலாடுதுறை மண்டல இணைப்பதிவாளர் தயாள விநாயகன் அமுல்ராஜ், தஞ்சாவூர் கூட்டுறவு விற்பனை இணையத்தின் இணைப்பதிவாளர் ஆனந்தி, கும்பகோணம் மத்தியக் கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர்
முத்துக்குமார், கூட்டுறவு சங்கங்களின் சரகத்துணைப்
பதிவாளர்கள், தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் மத்தியக் கூட்டுறவு வங்கிகளின் பொது மேலாளர்கள் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.