தஞ்சையில் கல்லணை கால்வாய்க்குள் குவிந்து கிடக்கும் குப்பைகள்

68பார்த்தது
தஞ்சையில் கல்லணை கால்வாய்க்குள் குவிந்து கிடக்கும் குப்பைகள்
தஞ்சை பெரிய கோவில் உலகப் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இந்த கோயிலை சுற்றி 3 பகுதியில் அகழியும், ஒரு பகுதியில் கல்லணைக் கால்வாய் ஆறும் செல்கிறது. இந்த நிலையில் தஞ்சை பெரிய கோவில் அருகே உள்ள கல்லணைக் கால்வாய் தற்போது தண்ணீரின்றி வறண்டு கிடக்கிறது. இதன் காரணமாக கல்லணைக் கால்வாய்க்குள் குப்பைகளை கொட்டி செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 'கல்லணைக் கால்வாயின் ஒரு பகுதி ஓரம் முழுவதும் இளநீர் கூடுகள் குவிந்து கிடக்கிறது. எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கல்லணைக் கால்வாய்க்குள் கொட்டிக் கிடக்கும் இளநீர் கூடுகளை அகற்றவும், குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.