மழையால் நீரில் மூழ்கி நெற்பயிர்கள் சேதம்

1579பார்த்தது
திருவோணம் பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் கோடை மழையால் தண்ணீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக கோடை மழை பெய்து வருகிறது. இந்த திடீர் கனமழையால், தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளான காரியாவிடுதி, தளிகை விடுதி, பணிகொண்டான் விடுதி, நெய்வேலி தென்பாதி ஆகிய பகுதிகளில் சுமார் 6 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு, ஆயிரம் ஏக்கர் கோடைப் பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்தன.

தற்போது 3 நாட்களாக வானம் இருண்டு, தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் நெல் வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதில் நெல் பயிர்கள் மூழ்கிக் கிடக்கிறது. இதனால் பயிர்கள் அழுகி, நெல்மணிகள் முளை விடும் நிலை உள்ளது. மேலும் எள், உளுந்து பயிர்கள் முற்றிலுமாக அழுகி விட்டது.

எனவே, மாவட்ட நிர்வாகம், வேளாண் துறையினர், சேதமடைந்த பயிர்களை பார்வையிட்டு, சேதமடைந்த எள், உளுந்து, நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் இழப்பீடும், வாழைப் பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி