பேராவூரணி அரசு கல்லூரியில் தமிழ் மன்றக் கூட்டம்

83பார்த்தது
பேராவூரணி அரசு கல்லூரியில் தமிழ் மன்றக் கூட்டம்
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ் மன்றக் கூட்டம் கல்லூரி முதல்வர் இரா. திருமலைச்சாமி தலைமையில் நடைபெற்றது.  

தமிழ்த்துறை தலைவர் 
சி. ராணி வரவேற்றார். கோயமுத்தூர் பாரதியார் பல்கலைக்கழக கௌரவ விரிவுரையாளர் முனைவர் இரா. ராஜதுரை கலந்து கொண்டு, 'காதலையும், வீரத்தையும் வளர்ப்பது சங்கத்தமிழே' என்ற தலைப்பில் பேசினார்.  

நிறைவாக, தமிழ் துறை கௌரவ விரிவுரையாளர் ஜெ. உமா நன்றி கூறினார். இதில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி