மீன்பிடி தடைக்கால நிவாரணம் கோரி ஜூன். 12 இல் சாலை மறியல்

52பார்த்தது
மீன்பிடி தடைக்கால நிவாரணம் கோரி ஜூன். 12 இல் சாலை மறியல்
மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை உடனடியாக விடுவிக்க கோரி,  
சேதுபாவாசத்திரம் ஒன்றியம், சிஐடியு மீனவர் சங்கம் சார்பில், செந்தலைப்பட்டினம் பேருந்து நிறுத்துமிடம் அருகே புதன்கிழமை காலை 11 மணிக்கு சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  
மீன்பிடி தடைக் காலத்தில் மீனவர்களுக்கு தமிழ்நாடு அரசு மீன்வளத்துறை சார்பில் ரூபாய் 8, 000 நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது.  
தஞ்சை மாவட்ட கடலோர கிராமங்களில் மீன்பிடி தொழில் செய்து வரும் பட்டுக்கோட்டை, சேதுபாவாசத்திரம் ஒன்றியங்களில் 
500க்கும் மேற்பட்ட மீனவர் குடும்பங்களுக்கு,  
அரசு அறிவித்துள்ள ரூ. 8, 000 நிவாரணத் தொகை இதுவரை வழங்கப்படவில்லை.  
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மீனவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.  எனவே, இதனைக் கண்டித்து வரும் ஜூன் 12ஆம் தேதி, புதன்கிழமை காலை 11 மணியளவில், செந்தலைப்பட்டினம் பேருந்து நிறுத்தத்தில், சிஐடியு மீனவர் சங்கம் சார்பில், சகாபுதீன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  
இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ஆர். எஸ். வேலுச்சாமி, ஒன்றியக் குழு உறுப்பினர் பி. பெரியண்ணன், வழக்குரைஞர் வீ. கருப்பையன், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர். மனோகரன் மற்றும் திரளான மீனவர்கள் பங்கேற்பார்கள்" என அறிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you