தினசரி தடையின்றி 14மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படுமா

51பார்த்தது
தினசரி தடையின்றி 14மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படுமா
தஞ்சாவூர் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கோடை நெல் பயிர்கள் மும்முனை மின்சாரம் கிடைக்காமல் காய்ந்து வருகின்றன. தினமும் 14 மணி நேரம் தடையின்றி மின்சாரம் வழங்கினால் தான் பயிர்களை காப்பாற்ற முடியும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பல ஆண்டுகளாக கோடை நெல் சாகுபடி பரவலாக நடந்து வருகிறது. கோடை சாகுபடி செய்யும் விவசாயிகள் பெரிதும் நம்பியிருப்பது பம்ப் செட்களைத் தான். மும்முனை மின்சாரம் சரிவர இருந்தால் தான் பம்ப் செட்கள் இயங்கும். ஆனால் கடந்த சில நாட்களாக பகலில் 6 மணி நேரம், இரவு 6 மணி நேரம் மும்முனை மின்சாரம் கிடைத்து வந்தது நின்றுவிட்டது. இதனால் கோடை சாகுபடி செய்த நெல் பயிர்கள் காய்ந்து
போகின்றன. பொதுவாக கோடை சாகுபடிக்கு காப்பீடு செய்யப்படுவதில்லை. குறுவை, சம்பா, தாளடிக்கு மட்டுமே காப்பீடு செய்யப்பட்டு வந்தது.

கடந்த சில ஆண்டுகளாக குறுவைக்கும் காப்பீடு செய்யப்படவில்லை. இந் நிலையில் விவசாயிகளின் கோடை சாகுபடி, குறுவை சாகுபடி, சம்பா சாகுபடி என்று அனைத்து சாகுபடிகளுக்கும் காப்பீடு செய்யப்பட்டால் தான் விவசாயிகள் பாதிப்பில் இருந்து தப்ப முடியும். இதுகுறித்து விவசாயிகள் கூறியது: இந்தாண்டு மும்முனை மின்சாரம்
சரிவர கிடைக்காததால் தவித்து வருகிறோம். தேர்தல் வரை ஓரளவு மின்சாரம் கிடைத்தது.
பகலில் 6 மணி நேரம் இரவில் 6 மணி நேரம் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி