பட்டுக்கோட்டையில் இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று(செப்.7) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பட்டுக்கோட்டையின் முதல் கோயில் அருள்மிகு ஸ்ரீ சுந்தர விநாயகர் கோயில், காசாங்குளம் அருள்மிகு மாணிக்க விநாயகர் கோயில் உள்ளிட்ட அனைத்து விநாயகர் கோயில்களிலும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பெரிய தீபாராதனை காட்டப்பட்டது. அனைத்து விநாயகர் கோயில்களிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டுச் சென்றனர்.