தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தலம் பகுதியில் அமைந்துள்ள காவேரி ஆறு, பல லட்சம் ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்களை பாதுகாப்பதற்கும், நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையிலும் இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த காவேரி ஆற்றினை சுற்றிலும், கபிஸ்தலம் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஆட்டுஇறைச்சி, கோழி மற்றும் மீன் போன்ற கழிவுகளும், , அருகில் உள்ள திருமண மண்டபத்தில் இருந்து உணவு கழிவுகளையும் ஆற்றினில் கொட்டி செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் அசுத்தம் ஏற்படுவதுடன், தூர் நாற்றம் வீசி, கொரோனா பரவி வரும் காலங்களில் நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் கண்டு கொள்வதில்லை என்றும், இந்த நிலை தொடரும் பட்சத்தில், பொதுமக்களை ஒன்று திரட்டி, வேன் ஸ்டாண்ட் உறுப்பினர்கள் மூலம் அரசுக்கு எதிராக போராட்டங்கள் அறிவிக்கப்படும் என தெரிவித்தனர்.