அரசுபள்ளி மாணவ மாணவிகளுக்கு ரொக்கப் பரிசு நீதிபதி வழங்கினார்

72பார்த்தது
பாபநாசம்
விவேகானந்தா சமூக கல்வி சங்கம் சார்பில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது. அது சமயம் அரசு பள்ளி மாணவர்கள் 2023-24 கல்வி ஆண்டில் பள்ளி அளவில்
முதல் மூன்று இடங்களை பிடித்த 4 பள்ளிகளைச் சேர்ந்த 25 மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசு மற்றும் விருது வழங்கும் விழா சங்க வளாகத்தில் நடைபெற்றது. சங்கத் தலைவர் தேவராசன் வரவேற்று பேசினார், சங்க சட்ட ஆலோசகர் கண்ணன், சங்க பொருளாளர் உஷாராணி முன்னிலை வகித்தனர். விழாவில் பாபநாசம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் ஏ. அப்துல்கனி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு ரொக்க பரிசு விருது வழங்கி பாராட்டி பேசினார். பாபநாசம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நீலாவதி, பாபநாசம்  அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் லோகநாதன், அய்யம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியர் அன்பழகன், திருக்கருக்காவூர் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழாசிரியர் செந்தில்குமார், சங்கத் துணைத் தலைவர் புவனேஸ்வரி, டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு பயிற்றுனர் லெட்சுமி பிரியா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் விழா நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சங்க செயலாளர் தங்க. கண்ணதாசன் செய்திருந்தார். விழாவில் பெற்றோர்கள் மாணவ, மாணவியர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக சங்க நிர்வாககுழு உறுப்பினர் சிவகுமார் நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி