நுண்ணுயிர் கட்டுபாட்டு அறை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா

574பார்த்தது
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்லாட்சியில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக, ரூபாய் 82 இலட்சம் மதிப்பீட்டில், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் நுண்ணுயிர் கட்டுபாட்டு ஆய்வகம் நிர்வாக கட்டிடம் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு கூடத்திற்கான கட்டிடத்திற்கு, மாநிலங்களவை உறுப்பினரும், தஞ்சை வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான சு. கல்யாணசுந்தரம் அவர்கள், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் அவர்கள் அடிக்கல் நாட்டினார்கள். விழாவில், கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய துணைப் பெருந்தலைவரும், மத்திய ஒன்றிய திமுக செயலாளருமான தி. கணேசன் அவர்கள், கும்பகோணம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜெ. சுதாகர் அவர்கள், தஞ்சாவூர் தோட்டக்கலை துணை இயக்குநர் அ. வெங்கட்ராமன் அவர்கள், தஞ்சாவூர் வேளாண்மை மற்றும் பொறியியல் துறை செயற்பொறியாளர் ஆ. அ. செல்லக்கண் ஞானசீலன் அவர்கள், கும்பகோணம் தோட்டக்கலை உதவி இயக்குநர் பொ. அனுசுயா அவர்கள், ஊராட்சி மன்ற தலைவர் கே. ரவி அவர்கள், மாவட்ட திமுக பிரதிநிதி டி. என். கரிகாலன் அவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் என். சசிகுமார் அவர்கள், த. பாண்டியன் அவர்கள், ஒன்றிய இளைஞர் அணி பொறுப்பாளர் ஆர். பிரேம்குமார் அவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி