அழகு காமட்சியம்மன் ஆலய பால்குடம் திருவிழா

60பார்த்தது
பாபநாசம் அருகே மதகரம் கிராமம் மாந்தோப்பு மட்டையாயான்திடலில் அமைந்துள்ள ஶ்ரீஅழகு காமாட்சி அம்மன் ஆலய பால்குடம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
 அது சமயம் மாப்பிள்ளை விநாயகர் கோவிலில் இருந்து சக்தி கரகம், கருப்புசாமி அருவாள், அக்னி சட்டி, சூலம், பால்குடம் காவடி, அலகு காவடி எடுத்து வந்து
நேர்த்தி கடன் செலுத்தினர். அதனைத் தொடர்ந்து
 அம்மனுக்குசிறப்பு அபிஷேகமும் தீபாரதனையும் நடைபெற்றது. மதியம் அன்னதானம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர்.