அமைச்சர் மகேஷ் பொய்யா மொழி கும்பகோணத்தில் பிரச்சாரம்

1077பார்த்தது
கும்பகோணத்தில் I. N. D. I. A. கூட்டணியின் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் வழக்கறிஞர் ஆர். சுதா அவர்களை ஆதரித்து, கும்பகோணம் தொகுதி, ஆரியபடைவீடு, கொருக்கை, அண்ணலக்ரஹாரம், சாக்கோட்டை, பழவாத்தான்கட்டளை, அம்மாசத்திரம், உமாமகேஸ்வரபுரம், உள்ளூர், கொரநாட்டுக்கருப்பூர், பெரும்பாண்டி, அசூர், தேவனாஞ்சேரி, நீலத்தநல்லூர், குமரன்குடி, விளந்தகண்டம் மற்றும் சோழபுரம் ஆகிய பகுதிகளில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் அவர்கள் வெற்றிச் சின்னமாம் கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தனர். உடன், கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய துணைப் பெருந்தலைவர் – மத்திய ஒன்றிய திமுக செயலாளர் தி. கணேசன் அவர்கள், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் – மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் எஸ். கே. முத்துசெல்வம் அவர்கள், கும்பகோணம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜெ. சுதாகர் அவர்கள், தஞ்சை மாவட்ட காங்கிரஸ் தலைவர் டி ஆர் லோகநாதன் அவர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் மாவட்ட – ஒன்றிய – பேரூர் – கிளை திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், சார்பு அணி நிர்வாகிகள், கழக தோழர்கள் உள்ளனர்.