கும்பகோணத்தில் வெள்ளிப்பட்டறையின் கதவை உடைத்து ரூ. 1.90 லட்சம் திருட்டு போனதை கிழக்கு காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பேட்டை குட்டையன் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் வெங்கடேசன் (35), இவர் மள்ளுக தெருவில் வெள்ளிப்பட்டறை வைத்து நகைகள் செய்து வருகிறார்.
நேற்று (நவம்பர் 14) காலையில் கடையை திறக்க வந்த வெங்கடேசன் கடையின் முன்தகவு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார், கடையினுள் வைத்திருந்த ரூ. 1 லட்சத்து 90 ஆயிரம் திருடு போயிருந்தது தெரிய வந்தது.
இது பற்றி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் எஸ். சுபாஷ் சம்பவ இடத்தை பார்வையிட்டு தடயவியல் நிபுணர்கள் மூலம் தடயங்களை சேகரித்தார், துப்பரியும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு பட்டறை அருகே கொஞ்ச தொலைவு சென்று திரும்பி வந்தது. மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து வருகிறார்.