திருமலை  கோவிலில் தமிழ் புத்தாண்டில் பரத நாட்டியம்

62பார்த்தது
தென்காசி மாவட்டம் பண்பொழி திருமலைக் குமார சுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பரதநாட்டியம் நிகழ்ச்சி நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் பண்பொழி திருமலைக் குமார சுவாமி கோவிலில் நேற்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாரதனை நடைபெற்றது.   தங்கம் மற்றும் வைடூரி கவச அலங்காரத்தில் திருமலைக் குமாரசுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

காலையிலிருந்து இரவு வரை பக்தர்களின் கூட்டம் அலை மோதியது. பல்லாயிரக்கணக் கான பக்தர்கள் நீண்ட வரிசை யில் ஒரு மணி நேரத்திற்கும் மேல் காத்திருந்து முருகப் பெருமானை வழிபட்டனர்.     

இரவு தங்கச் சப்பரத்தில் திருமலை முருகன் எழுந்தருளி மேளதாளம் முழங்க வான வேடிக்கை நிகழ்ச்சியுடன்  உலா வந்தார்.

கோவில் வளாகத்தில் மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.   சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேல் நடந்த பரதநாட்டியத்தில் திரளான மாணவிகள் பங்கேற்றனர்.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு
தென்காசியில் இருந்து  திருமலை கோவிலுக்கு அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்கியது.

தொடர்புடைய செய்தி