செங்கோட்டையில் அதிமுக வாக்குசேகரிப்பு

68பார்த்தது
செங்கோட்டையில் அதிமுக வாக்குசேகரிப்பு
செங்கோட்டையில் தென்காசி வடக்குமாவட்ட அதிமுக செயலாளரும் கடையநல்லுார் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா ஆலோசனையின் பேரில் செங்கோட்டை ஒன்றிய செயலாளா் ஆய்க்குடி கே. செல்லப்பன் தலைமையில் அதிமுகவினர் ஒன்றிய பகுதிகளில் வீடுவீடாக சென்று தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் அஇஅதிமுக கூட்டணி கட்சியின் வேட்பாளா் புதிய தமிழக கட்சியின் நிறுவனா் கிருஷ்ணசாமிக்கு ஆதரவாக இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அதன் ஒருபகுதியாக நேற்று செங்கோட்டை பேரூந்து நிலையத்தில் வைத்து பேரூந்தில் உள்ள பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க கோரி அதிமுகவினர் துண்டு பிரசுரம் வழங்கி வாக்கு சேகரித்தனர்.

தொடர்புடைய செய்தி