தமிழகம் முற்போக்கு சக்திகளின் எக்கு கோட்டை: கே.எஸ்.அழகிரி

55பார்த்தது
தமிழகம் முற்போக்கு சக்திகளின் எக்கு கோட்டை: கே.எஸ்.அழகிரி
இந்தியாவிலேயே எத்தகைய உத்தியை கையாண்டாலும் பா.ஜ.க.வின் வாக்கு வங்கியை விரிவுபடுத்த முடியாத ஒரே மாநிலமாக மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகளின் எக்கு கோட்டையாக தமிழகம் விளங்குகிறது என காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், சாம, பேத, தான, தண்டங்களை பயன்படுத்தி அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுத்துறை ஆகிய அமைப்புகளின் மூலம் ஏவி, பா.ஜ.க.வை எதிர்க்கும் தி.மு.க. அமைச்சர்கள் மீதும், எதிர்கட்சித் தலைவர்கள் மீதும் பல்வேறு சோதனைகள், வழக்குகள் என அடக்குமுறைகளை ஏவி விட்டாலும் தமிழகத்தில் பா.ஜ.க.வின் எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறியாகவே அமைந்துள்ளது என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி