அமைதியான மாநிலமாக தமிழ்நாடு போற்றப்படுகிறது - சபாநாயகர்

57பார்த்தது
அமைதியான மாநிலமாக தமிழ்நாடு போற்றப்படுகிறது - சபாநாயகர்
வெளிநாட்டு முதலீட்டாளர்களால் அமைதியான மாநிலமாக தமிழ்நாடு போற்றப்படுகிறது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை வாசித்த சபாநாயகர் அப்பாவு, குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் ஒரு போதும் அமல்படுத்துவதில்லை என்பதில் அரசு உறுதியாக உள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது 14.54 லட்சம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ரூ.6.64 லட்சம் கோடி முதலீடுகள் செய்தவதற்கு நிறுவங்களுடன் 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் நமது மாநிலம் பல பேரழிவுகளை சந்தித்த போதிலும், பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்றம் ஆகிய இரண்டிலும் குறிப்பிடத்தக்க சாதனையை அடைந்துள்ளது என்று குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்தி