தமிழகம்: அதிகாலையில் ஏடிஎம் மையத்தில் கார் மோதி விபத்து

60பார்த்தது
தமிழகம்: அதிகாலையில் ஏடிஎம் மையத்தில் கார் மோதி விபத்து
தலைநகர் சென்னையில் உள்ள அண்ணாநகர் 2வது நிழற்சாலையில், இன்று (பிப். 05) அதிகாலை சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த ஏடிஎம் மையத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக காரில் இருந்த 5 பேருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. விபத்து குறித்து அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி