தமிழ்நாடு அரசின் 2024-25ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை கடந்த 19ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதி நிலை அறிக்கை வெளியான உடனுக்குடன் அதன் சிறப்பம்சங்கள் குறித்து வாட்ஸ் அப் செயலி மூலம் சுமார் 2 கோடியே 8 லடசத்து 76 ஆயிரத்து 480 பேர்களுக்கு கைப்பேசி குறுச்செய்திகளாக அனுப்பட்டு அது 1 கோடியே 77 லட்சத்து 50 ஆயிரம் பயனாளர்களால் பார்வையிடப்பட்டுள்ளது. இந்த புதிய முயற்சியாக வரலாற்றில் முதல் முறையாக உடனுக்குடன் நிதிநிலை அறிக்கை மக்களை சென்று சேர்ந்துள்ளது என்று கூறப்படுகிறது.