தமிழ் சினிமா துணை நடிகை காலமானார்

18838பார்த்தது
தமிழ் சினிமா துணை நடிகை காலமானார்
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த துணை நடிகை விஜயகுமாரி நேற்று (ஜூன் 6) உயிரிழந்தார். ஈரோட்டை சேர்ந்த இவர் சென்னை வளசரவாக்கம் பகுதியில் தங்கி இருந்து படங்கள் மற்றும் சீரியல்களில் துணை நடிகையாக நடித்து வந்தார். இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததை தொடர்ந்து லாரன்ஸ் மற்றும் KPY பாலா போன்றோரிடம் உதவி கேட்டிருந்தார். தொடர்ந்து புற்றுநோய் சிகிச்சையில் இருந்து வந்த இவர் இறுதியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி