மோடி காலில் விழ முயன்ற நிதிஷ் குமார்

56பார்த்தது
மோடி காலில் விழ முயன்ற நிதிஷ் குமார்
தேர்தல் முடிவுகள் வெளியாகி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்க தயாராகி வருகிறார். அதற்கு முன்பு பாஜக கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டம், பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் இன்று(ஜூன் 7) நடந்தது. அதில் பாஜக தலைவர்கள் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவரும், பீகார் மாநில முதலமைச்சருமான நிதிஷ் குமாரும் அதில் கலந்துகொண்டார். அப்போது மேடையில் பேசி முடித்து விட்டு நாற்காலியை நோக்கி வந்த நிதிஷ் குமார், சட்டென மோடியின் காலில் விழு முயற்சித்தார். ஆனால், அதை மோடி தடுத்து நிறுத்தினார். இந்த சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.