சென்னை துறைமுகம் தொகுதியில் பாஜக சார்பில் என் மண் என் மக்கள் யாத்திரை இன்று நடந்தது. இதில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா பங்கேற்றார். ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்த அவர் திடீரென இந்தியில் பேச ஆரம்பித்தார். திமுகவை சீண்டும் வகையில் ஜேபி நட்டா இப்படி பேசியதாக கூறப்படுகிறது. அப்போது ‛‛இந்தியில் பேச வந்த கோரிக்கையால் நான் இந்தி மொழியில் சில வார்த்தைகளை பேசுகிறேன்'' என்றார். இதை கேட்டவுடன் பாஜகவினர் உற்சாக கோஷமிட்டனர்.