அமலாக்கத்துறை இயக்குனருக்கு சம்மன்

574பார்த்தது
அமலாக்கத்துறை இயக்குனருக்கு சம்மன்
அமலாக்கத்துறை அதிகாரி கைதுசெய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனையிட சென்ற போது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்த விவகாரத்தில், அமலாக்கத்துறை உதவி இயக்குனருக்கு மதுரை தல்லாகுளம் போலீஸார் சம்மன் அனுப்பி உள்ளனர். மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை செய்தபோது பணி செய்ய விடாமல் தடுத்ததாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது மதுரை தல்லாகுளம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி