பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. நேற்று
பங்குச்சந்தை ஓரளவு உயர்ந்தது. இந்நிலையில் உள்நாட்டுப் பங்குச் சந்தை குறியீடுகள் இன்று (புதன்கிழமை) சரிவுடன் முடிவடைந்தது. அதன்படி, சென்செக்ஸ் 33.21 புள்ளிகள் அதிகரித்து 64,975.61 ஆகவும், நிஃப்டி 36.80 புள்ளிகள் அதிகரித்து 19,443.50 ஆகவும் உள்ளது. மேலும், பிபிசிஎல்,
அதானி போர்ட்ஸ், சிப்லா, ஏசியன் பெயிண்ட்ஸ், டைட்டன் பங்குகள் லாபமடைந்தது. ஐசிஐசிஐ, என்டிபிசி, டெக் மஹிந்திரா மற்றும் இன்ஃபோசிஸ் பங்குகள் நஷ்டமடைந்துள்ளது.